தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக திகழும் கீர்த்தி சுரேஷ் தவிர்க்க முடியாத நடிகை வலம் வருகின்றார். இவருடைய நடிப்பில் இறுதியாக பேபி ஜான் திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவிலும் அறிமுகமானார் கீர்த்தி சுரேஷ்.
கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி தட்டில் என்ற தனது காதலரை திருமணம் செய்திருந்தார். கிட்டத்தட்ட இவர்கள் 15 ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில் இரண்டு வீட்டார்களின் சம்மதத்துடனும் இவர்களுடைய திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து பேபி ஜான் படத்திற்காக கீர்த்தி சுரேஷ் கழுத்தில் வெறும் தாலியுடன் வலம் வந்த காட்சிகள் இணையத்தை கவர்ந்திருந்தன. மேலும் குறித்த புகைப்படங்கள் சர்ச்சையையும் ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் கிறிஸ்தவ முறைப்படி நடைபெற்ற திருமணத்தின் புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார்.
கீர்த்தி சுரேஷ் இன் திருமணம் கடந்த டிசம்பர் மாதம் 21 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் அடிக்கடி தனது திருமண புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த வருகின்றார். இதோ அந்த புகைப்படங்கள்..
Listen News!