தமிழ்த் திரை உலகில் நகைச்சுவை மூலம் மக்களை சிரிக்க வைத்த பல கலைஞர்கள் கால ஓட்டத்தில் மறக்கப்படுகின்றார்களா? என்ற கேள்வியை வெங்கட்ராஜின் மறைவை முன்வைத்து பலர் விமர்சித்து வருகின்றனர்.
அதாவது லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் மக்களை சிரிக்க வைத்தவர் தான் வெங்கட். அதன்பின்பு சந்தானம், உதயநிதி ஸ்டாலின் போன்ற நடிகர்களுடன் பல திரைப்படங்களில் நடித்தார். அவருடைய இயல்பான நகைச்சுவை பலரையும் கவர்ந்தது.
சமீபத்தில் அவர் உயிரிழந்த போது அவருடைய மறைவுக்கு திரையுலகமும் ஊடகங்களும் போதிய கவனத்தை செலுத்தவில்லை என நடிகர் காதல் குமார் வீடியோ ஒன்றை வெளியிட்டு வேதனை தெரிவித்து இருந்தார். இது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதன்படி அவர் கூறுகையில், மக்களையும் சகல கலைஞர்களையும் சிரிக்க வைத்த ஒரு கலைஞர் மறைந்த போது அவருக்கு அஞ்சலி செலுத்த மீடியாவோ அல்லது அவருடன் பணியாற்றி இன்று பெரிய நிலையில் இருக்கும் நடிகர்களோ வராதது வருத்தம் அளிக்கின்றது.
பணம் மற்றும் புகழை வைத்து மட்டுமே ஒருவரது மரணம் செய்தியாக்கப்படுவதால் டிஆர்பி கிடைக்காது என்பதற்காகவும், எளிய கலைஞர்களின் மறைவு புறக்கணிக்கப்படுவது தான் இன்றைய கசப்பான நிதர்சனம்.
நீண்ட காலம் உழைத்த ஒரு கலைஞன் வறுமையிலேயே வாழ்ந்து மறைந்துள்ளார். அனைவரையும் சிரிக்க வைத்தவர் மரணத்தில் அழுவதற்கு கூட ஆளில்லை என்று தெரிவித்துள்ளார்.
Listen News!