• Jan 22 2026

மீனவ பொண்ணு சுபிக்கு உற்சாக வரவேற்பு கொடுத்த ஊர்மக்கள்.! வைரல் வீடியோ

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

பிக் பாஸில் இருந்து வெளியேறிய மீனவ பொண்ணு சுபிக்கு உற்சாக வரவேற்பு கொடுத்துள்ளார்கள் ஊர்மக்கள். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

பிக் பாஸ் சீசன் 9-ல் போட்டியாளர்களுள் ஒருவராக கலந்து கொண்ட சுபிக்ஷா மிகவும் முக்கியமானவராக காணப்பட்டார். அதற்கு காரணம் அவர் கடலோர சமூகத்தை சேர்ந்த பெண் என்பதுதான்.

இவர் மீன் பிடிப்பதற்கு ஆண் வர்க்கத்தினர் தான் அவசியம் என்பதை மாற்றி அமைக்கும் விதத்தில் தனது தந்தையுடன் மீன்பிடிக்கச் செல்வது, கடலுக்குள் செல்வது,  மீன்களை விற்பனை செய்வது என அத்தனையையும் யூட்யூபில் பதிவேற்றி பிரபலமானார்.


இவர் தனக்கு கிடைத்த பிக் பாஸ் வாய்ப்பினையும் நல்ல விதமாக பயன்படுத்தியுள்ளார். இறுதியாக இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போதும் அவருக்கு பாராட்டு மழை பொழியப்பட்டது.

இந்த நிலையில், கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சுபிக்ஷா தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார். இதன்போது அவருக்கு மாலை அணிவித்து மேளதாளத்துடன் ஊர் மக்கள் வரவேற்றுள்ளனர்.

Advertisement

Advertisement