• Feb 05 2026

க்ரிஷோட அம்மா தப்பான வேலை பண்ணுறாங்க.! புது குண்டை தூக்கி போட்ட முத்து

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், வீட்டிற்கு வந்த முத்து வீட்டில் உள்ள ஜன்னல் கதவுகளை மூடுகின்றார். அதற்கு பிறகு க்ரிஷை தத்து கொடுப்பதை பற்றி  மனோஜ் முத்துவிடம் சொல்ல, நல்ல விஷயம் தான் தத்து கொடு என்று சொல்லுகின்றார். 

மேலும் இதனை தானும் ரோகிணியும் சேர்ந்து எடுத்த முடிவு தான் என்று சொல்ல, மீனா அவங்க 25 லட்சத்துக்கு க்ரிஷை விற்க பார்க்கிறாங்க என்று சொல்லுகின்றார். ஆனாலும் முத்து க்ரிஷை தத்து கொடுப்பது நல்லம் என்று சொல்லுகின்றார். 

அதற்குக் காரணம் தனக்கு க்ரிஷின் அம்மா பற்றி இப்போது தான் தெரியும். அவர்  தப்பான தொழில் ஈடுபடுகின்றார்.  அவர் தப்பு பண்ணுகின்றார். இதனால் க்ரிஷ் அவளுடன் வளர முடியாது  என்று சொல்லுகின்றார். 

இதைக் கேட்ட ரோகிணி அதிர்ச்சி அடைந்து,  ஒரு பொண்ண பத்தி தப்பா பேச வேண்டாம். உங்களுக்கு எப்படி தெரியும் என்று கேட்க, அவங்க என்னோட கார்ல தான் வந்தாங்க.. அவங்களோட போன்ல க்ரிஷ்ட போட்டோ இருந்துச்சு. புருஷன் செத்த பிறகு அவங்க இப்படி ஒரு தொழிலை செய்றாங்க  என்று சொல்கிறார். 

இதனால் முத்துவுக்கும் ரோகிணிக்கும் இடையே வாக்குவாதம் நடக்க, ஒரு கட்டத்தில்  ரோகினி க்ரிஷ் என்னுடைய மகன் தான் என்பதை ஒத்துக் கொள்கின்றார்.  

அதற்கு பிறகு நான் ஒரு பொண்ண பத்தி தப்பா பேசினது தப்புதான். ஆனா இத ரோகிணி வாயால உண்மைய சொல்ல வைக்கணும் என்றுதான் இப்படி கதைத்தேன் என்று அண்ணாமலையிடமும் ரோகிணியிடமும் மன்னிப்பு கேட்கிறார். 

அது மட்டுமின்றி இவருடைய பெயர் கூட போய் தான். இவருடைய உண்மையான பெயர் கல்யாணி. புருஷன் 6,7  மாசத்தில் விபத்துல இறந்து விட்டான்.  அவருக்கு பிறந்த  பிள்ளை தான் க்ரிஷ் என்ற முழு விடயத்தையும் சொல்லுகின்றார். இதையெல்லாம் கேட்ட வீட்டார்கள் அதிர்ச்சி அடைகின்றனர். மனோஜும் பேரதிர்ச்சியில் காணப்படுகின்றார். 



Advertisement

Advertisement