தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக சிவகார்த்திகேயன் உருவெடுத்துள்ளார். இவர் ஆரம்பத்தில் முன்னணி நடிகர்களுடன் துணை கதாபாத்திரங்களில் நடித்தார்.
அதன் பின்பு கதாநாயகனாக கலக்கி வந்த சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக வெளியான அமரன் திரைப்படம் இவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது.
d_i_a
இந்த நிலையில், அமரன் படத்தின் நூறாவது நாள் வெற்றி விழாவில் சிவகார்த்திகேயன் பேசிய சில விடயங்கள் வைரல் ஆகி வருகின்றது. அதில் அவர் தனது லட்சியம் பற்றி தெரிவித்துள்ளார்.
அதன்படி அவர் கூறுகையில், என்னுடைய கோல் என்பது இயக்குனர் சங்கர் படத்திலும் முருகதாஸ் படத்தில் நடிக்க வேண்டும் என்பதுதான். எதிர்நீச்சல் டிஸ்கஷன் போதும் இதை நான் தெரிவித்திருந்தேன். இதை கேள்விப்பட்ட ஒருத்தர் சொன்னாரு, இது உனக்கு ரொம்ப ஓவரா தெரியலையா? படம் ஓடுது என்பதற்காக பேராசைப்படலாமா? எனக் கேட்டார்.
ஆனால் ஏன் ஆசைப்படக் கூடாதா என எனக்கு தோன்றியது. ஆனா அந்த டைம்ல சொன்னன், அவங்க படத்துல நடிக்கணும் என்றா அதுக்கான திறமையை வளர்க்க வேண்டும் என்று.. இவ்வாறு எஸ்கே தெரிவித்து உள்ளார்.
அவர் அன்று சொன்னது போலவே தற்போது தனக்கான திறமையை வளர்த்து பிரபல இயக்குநர்களுடனும் கூட்டணி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!