• Feb 05 2025

'விடாமுயற்சி' படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி மறுப்பா? தமிழ்நாடு அரசின் உத்தரவு என்ன?

Aathira / 2 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்குமார் நடிப்பில் இறுதியாக துணிவு படம் வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அஜித்குமாரின் கைவசம் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய திரைப்படங்கள் காணப்படுகின்றன.

இதில் விடாமுயற்சி திரைப்படம் பிப்ரவரி ஆறாம் தேதி திரை அரங்குகளில் ரிலீசாக உள்ளது. இதற்கு அஜித்தின் ரசிகர்கள் தியேட்டர் வாசல்களில் கட்டவுட் வைத்து இந்த படத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வருகின்றார்கள். அது மட்டும் இல்லாமல் விடாமுயற்சி திரைப்படம் டிக்கெட் புக்கிங்கில் மட்டும் 5 லட்சத்தை தாண்டி சாதனை படைத்துள்ளது.

விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் ஆக்சன் கிங் அர்ஜுன், பிக்பாஸ் பிரபலமான ஆரவ், ரெஜினா மற்றும் நிகில் நாயர் ஆகியோர் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். சமீபத்தில் இவருடைய இசையில் வெளியான பாடலும் ரசிகர்களை கவர்ந்தது .


இந்த நிலையில், விடாமுயற்சி திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்து உள்ளது. அதன்படி முதலாவது காட்சியை காலை 9 மணிக்கு ஆரம்பித்து அதன் இரவு காட்சியை நள்ளிரவு இரண்டு மணிக்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், ஒரு நாளிலேயே சுமார் ஐந்து காட்சிகள் திரையிடலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் தளபதி ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் காணப்படுகின்றார்கள்.

Advertisement

Advertisement