• Mar 12 2025

நடிகர் உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு சென்றது வருத்தமாக உள்ளது - ரெஜினா பதில்

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் முன்னணியில் உள்ள நடிகைகளில் சிறப்பாக விளங்குபவர் ரெஜினா. இவர் தமிழ்,தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் படங்கள் நடித்து அதிகளவான ரசிகர்களை தன்னகத்தே கொண்டுள்ளார். 

ரெஜினா இறுதியாக அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்துள்ளார். இதனால் அதிகளவிலான நேர்காணலில் கலந்து வருகின்றார். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட போது அங்கே நடிகர் உதயநிதி ஸ்டாலின் பற்றி கதைத்துள்ளார்.


அதில் அவர் கூறுகையில், எனக்கு" சரவணன் இருக்க பயமேன்" படத்தில் உதயநிதி ஸ்டாலின் உடன் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது என்றதுடன் அந்தப் படத்தில் வருகின்ற " எம்புட்டு இருக்குது ஆசை உன்மேல.." என்ற பாடலின் மூலம் நான் பிரபல்யம் அடைந்து கொண்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும் உதயநிதி சினிமாவை விட்டு அரசியலுக்கு போனது எனக்கு மிகவும் கவலையாக உள்ளது என்றதுடன்  அவர் இன்னும் நிறைய படங்களை நடித்திருந்தால் ரசிகர்களுக்கு சந்தோசமாக இருந்திருக்கும் எனவும் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement