தென்னிந்திய சினிமாவில் வெளியாகும் திரைப்படங்களை அதிகளவானோர் தியேட்டரில் சென்று கடும் ஆரவாரத்துக்கு மத்தியில் பார்த்து மகிழ்வார்கள். ஆனாலும் இன்னும் சிலர் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் வரை அந்த படங்களை பொறுத்திருந்து பார்ப்பார்கள்.
அந்த வகையில் ஒவ்வொரு வாரமும் புதிய புதிய திரைப்படங்கள் திரையரங்குகளிலும், நேரடியாக ஓடிடி தளத்திலும் வெளியாகி கொண்டுள்ளன. அதில் பிரபல நடிகர்களின் படங்களை மட்டும் இல்லாமல் சாதாரண நடிகர்களின் படமும் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகின்றன.
சமீபத்தில் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்த கேம் சேஞ்சர் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளோடு வெளியானது. ஆனாலும் இந்த திரைப்படம் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் அதன் பாதியைக் கூட வசூலில் தாண்டவில்லை.
இது பெரும் ஏமாற்றத்தை படக்குழுவினருக்கு கொடுத்தது. இந்த படத்தின் தோல்வியால் கேம் சேஞ்சர் திரைப்படம் பிப்ரவரி 7ஆம் தேதி அமேசன் ஓடிடி தளத்தில் ரிலீஸாக உள்ளது.
இந்த நிலையில், இந்த வாரம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகியுள்ள படங்கள் பற்றிய விபரம் வெளியாகி உள்ளது. அதில் பெப்ரவரி 5ஆம் தேதியான இன்றைய தினம் அனுஜா என்ற ஹிந்தி படம் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது.
இதைத் தொடர்ந்து பிப்ரவரி 6ஆம் தேதி 'தி ஆர்டர்' என்ற திரைப்படமும், Invincible என்ற ஆங்கில படமும் அமேசன் பிரேம் ஓடிடித் தளத்தில் வெளியாக உள்ளது.
மேலும் மெட்ராஸ் காரன் என்ற தமிழ் திரைப்படம் பிப்ரவரி 7ஆம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதோடு அன்றைய தினம் கேம் சேஞ்சர் திரைப்படமும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!