• Jan 19 2025

சிறகடிக்க ஆசை.. திடீரென மீனா காணாமல் போனதற்கு என்ன காரணம்?

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ என்ற சீரியல் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் இந்த சீரியல் குறைந்த நாட்களிலேயே டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் உள்ளது என்பதையும் பார்த்து வருகிறோம். 

இந்த நிலையில் ’சிறகடிக்க ஆசை’ சீரியல் ஏற்கனவே தெலுங்கு மற்றும் கன்னடத்தில் ஒளிபரப்பாகி வரும் நிலையில் சமீபத்தில் இந்த சீரியல் மலையாளத்திலும் தொடங்கப்பட்டது. தமிழில் மீனா கேரக்டரில் நடித்து வந்த கோமதி பிரியா தான் மலையாளத்திலும் நாயகி என்பதும் சமீபத்தில் தொடங்கப்பட்ட இந்த சீரியல் மலையாளத்திலும் நல்ல டிஆர்பி ரேட்டிங் பெற்று வருவதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டிலும் மாறி மாறி கோமதி பிரியா படப்பிடிப்புகளில் கலந்து கொண்டிருந்தாலும், மலையாளத்தில் கூடுதலாக கால்ஷீட் கொடுத்து நடித்து வருவதாகவும், இதற்கு தமிழ் ‘சிறகடிக்க ஆசை’ குழுவினர்களும் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.



எனவே தான் ’சிறகடிக்க ஆசை’ சீரியலில் நேற்றும், இன்றும் ஒளிபரப்பான எபிசோடுகளில் மீனாவின் காட்சி மிகவும் குறைவாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று மீனாவின் சில காட்சிகள் மட்டுமே ஒளிபரப்பான நிலையில் மீதி எபிசோடை அண்ணாமலை - விஜயா ரொமான்ஸ் காட்சிகளை வைத்து நகர்த்திவிட்டனர்.

 அதேபோல் இன்றும் மீனா ஒரு சில நிமிடங்கள் மட்டுமே வரும் காட்சிகள் உள்ளது என்பதும், ஸ்ருதி - ரவி மற்றும் முத்து காட்சிகள் தான் அதிகம் உள்ளது என்பதும் இன்றைய எபிசோடை பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும். 

தமிழ் மலையாளம் என மாறி மாறி கோமதி பிரியா நடித்து வருவதால் தான் ’சிறகடிக்க ஆசை’ சீரியலில் மீனாவின் காட்சிகள் குறைந்து விட்டதாகவும் இருப்பினும் இனிவரும் நாட்களில் அவர் அதிகமாக தமிழுக்கு  முக்கியத்துவம் கொடுத்து அவரது காட்சிகள் அதிகம் இடம் பெறும் வகையில் பார்த்துக் கொள்வார் என்றும் இந்த சீரியலின் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement