சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோட், ரவி - ஸ்ருதியின் பங்ஷன் நன்றாக நடைபெறுகின்றது. அதில் பாடகர் பாட்டை பாடி கொண்டு இருக்க அனைவரும் தங்களுடைய ஜோடிகளைப் பார்த்து ரொமான்ஸ் பண்ணுகிறார்கள். விஜயாவும் அண்ணாமலையை பார்த்து வெட்கத்தில் காணப்படுகிறார்.
இதைத் தொடர்ந்து பங்ஷனுக்கு சென்ற நீத்து அவர்களை வாழ்த்தி விட்டு தனக்கு காலில் அடிபட்ட விஷயத்தையும் சொல்லுகின்றார். அதன் பின்பு வீட்டுக்கு வந்த ஸ்ருதி உங்களால் தான் எங்களுடைய பங்க்ஷன் நன்றாக நடந்தது என்று மீனாவை பாராட்டி அவருக்கு கிப்ட் ஒன்றை கொடுக்கின்றார்.
அதனை திறந்து பார்த்த மீனாவுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அதாவது விலை உயர்ந்த போன் ஒன்றை பரிசளிக்கின்றார் ஸ்ருதி. இதனால் விஜயா அவளுக்கு எதுக்கு இந்த போன்.. போன வச்சு மூலமா போடப் போறா என்று பேசுகின்றார். ரோகினியும் நாங்க அவங்களுக்கு டைமண்ட் ரிங் போட்டோ ஆனா எங்கள கவனிக்கல என்று மனோஜுடன் பேசுகிறார்.
இதை தொடர்ந்து டிராபிக் அதிகாரி அவருடைய அம்மாவை சீதா வேலை பார்க்கும் ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்கின்றார். அங்கு அவருடைய அம்மாவுக்கு உடம்பு முடியாத நிலையில், அவரை அவசரமாக வேலைக்கு வருமாறு அழைக்கின்றார்கள்.
இதனால் என்ன பண்ணுவது என்று தெரியாமல் அவர் யோசித்துக் கொண்டிருக்க, அந்த நேரத்தில் அங்கிருந்த சீதா தான் அம்மாவை கவனித்துக் கொள்கிறேன் நீங்கள் சென்று வாருங்கள் என்று சொல்லுகின்றார். இதனால் அவரும் சந்தோஷப்பட்டு சீதாவிடம் தனது அம்மாவை கவனிக்குமாறு சொல்லிவிட்டு கிளம்புகின்றார்.
இன்னொரு பக்கம் ரோகினி சிட்டியை சந்தித்து சத்யாவின் வீடியோ வெளியான விஷயத்தில் முத்து உன் மீது சந்தேகம் கொண்டுள்ளார். அதனால் கவனமாக இருக்குமாறு சொல்ல, அவர் விழுந்து விழுந்து சிரிக்கின்றார். அவனுக்கு ஒரே எதிரி நான் தானே சந்தேகப்படுவான் என்று.. மேலும் சத்யாவை இன்னொரு கேசில் மாற்றி விடுவதற்காகவும் ப்ளான் போடுகின்றார். இதுதான் இன்றைய எபிசோட்..
Listen News!