• Sep 28 2025

நம்ம தல எதை பண்ணாலும் சூப்பர் தான்.. வேற லெவல் உத்வேகத்துடன் ரேஸிற்கு ரெடியாகும் அஜித்.!

subiththira / 3 days ago

Advertisement

Listen News!

இந்திய திரைப்பட உலகின் பிரபல நடிகர் மற்றும் மோட்டார் ரேஸில் ஆர்வமுள்ள அஜித் குமார், தனது ரேஸிங் பயணத்தை மேலும் ஒரு படிநிலைக்கு கொண்டு செல்ல இருப்பதாக தற்பொழுது தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது அவர், பிரபல ரேஸிங் அணி Virage Racing-இன் கூட்டணியில், Asian Le Mans Series 2025 தொடரில் பங்கேற்க இருப்பதாக அவரது ரேஸிங் அணி [ Ajith Kumar Racing ] அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.


இந்த செய்தி அவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல், இந்திய மோட்டார் ரேஸிங் உலகத்துக்கும் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அஜித் குமார் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் மட்டுமல்லாமல், அவருடைய இரண்டாவது ஆர்வமான மோட்டார் ரேஸிங்கிலும் பல வருடங்களாக தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இவர் 2000-ஆம் ஆண்டு முதல் பல தேசிய மற்றும் சர்வதேச ரேஸிங் போட்டிகளில் பங்கேற்று உள்ளார்.


கடந்த சில ஆண்டுகளில், அவர் தனது சொந்த ரேஸிங் அணி மூலம், மோட்டார் ரேஸிங்கில் மீண்டும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement