• Sep 28 2025

மீண்டும் அதிர்ச்சி.. பிரபல திரைப்பட இயக்குநர் திடீர் மரணம்..!

luxshi / 3 days ago

Advertisement

Listen News!

பிரபு தேவாவின் 2001 ஆம் ஆண்டு காதல் நகைச்சுவை படமான 'மனதை திருடிவிட்டாய்' இயக்கிய ஆர்.டி. நாராயணமூர்த்தி தனது 59ஆவது வயதில் காலமானார். 

குறித்த திரைப்பட இயக்குனர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு இரவு 8.30 மணியளவில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 

அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றையதினம் இரவு  காலமானார். 


இதேவேளை மறைந்த ஆர்.டி. நாராயணமூர்த்தி  சன் டிவியில் ஒளிபரப்பான நந்தினி, ராசாத்தி, ஜிமிக்கி கம்மல், அன்பே வா, மற்றும் மருமகளே வா போன்ற தமிழ் தொலைக்காட்சி தொடர்களை இயக்கியுள்ளார்.

இதேவேளை அவரது மகன் லண்டனில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. 

அவரது மகன் வந்த பிறகுதான் இறுதிச் சடங்குகள் செய்யப்படும் என்பதால், இயக்குனர் நாராயணமூர்த்தியின் உடல் தனியார் மருத்துவமனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. 

அந்தவகையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை பம்மலில் உள்ள அவரது இல்லத்தில் இறுதிச் சடங்கு நடைபெறும் என்று கூறப்படுகிறது.

இதேவேளை திரையுலகில் தனது தனித்துவமான கதைக்களம் மற்றும் நகைச்சுவை கலந்து உருவாக்கிய படங்களால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த ஆர்.டி. நாராயணமூர்த்தியின் மறைவு திரைத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement