சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில் , மீனா புதிதாக பிசினஸ் ஒன்றை ஆரம்பிக்கின்றார். அதற்கு அண்ணாமலையிடம் ஆசிர்வாதம் பெறுகின்றார். அந்த நேரத்திலேயே மீனாவுக்கு புதிய ஆர்டர் ஒன்று வருகின்றது. அதற்கு உடனே காசும் கிடைத்து விடுகின்றது. இதை பார்த்து விஜயா அதிர்ச்சி அடைகின்றார்.
இதை தொடர்ந்து மீனா புதிய ஆர்டர் ஒன்றைக் கொண்டு போய் கொடுக்கும்போது அங்கு சீதாவையும் அருணையும் சந்திக்கின்றார். இதன்போது அருண் மீனாவை பாராட்டி, முத்துவை மட்டம் தட்டி பேசுகின்றார். இதனால் கோபப்பட்ட மீனா, அருணுக்கு பதிலடி கொடுத்துவிட்டு சென்று விடுகின்றார்.
அதன் பின்பு விஜயா, தான் ஒரு நல்ல காரியம் செய்யப் போவதாகவும் வீட்டில் உள்ள அனைவரும் அதற்கு ப்ளட் கொடுக்க வேண்டும் என்றும் சொல்லுகின்றார். இதனால் விஜயா என்ன இப்படி மாறிட்டார் என்று முத்துவும் அண்ணாமலையும் சந்தேகத்தில் இருக்கின்றார்கள்.
அதன்படி அடுத்த நாள் பார்வதி வீட்டில் தனது குடும்பத்தாருடன் ப்ளட் டோனட் பண்ணுகிறார் விஜயா. அதற்கு மீடியாவை வரவைத்து தான் செய்த நல்ல விஷயத்தை பற்றி பேசுகின்றார்.
இறுதியில் தனது ரத்தத்திலேயே நல்ல செயல்கள் செய்ய வேண்டும் என்பது ஊறி உள்ளது என்று சொல்லி பெருமையாக மீடியாக்களுக்கு பேட்டி கொடுக்கின்றார். இதை பார்த்து முத்துவும் அண்ணாமலையும் அதிர்ச்சி அடைந்து நிற்கின்றனர். இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!