• Jan 19 2025

இப்போ என் முதல் புருஷன் வந்தா என்ன பண்ணுவீங்க? கோபிக்கு பேரதிர்ச்சி கொடுத்த ராதிகா! பாக்கியா குடும்பத்தில் மீண்டும் அவலமா?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரில் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.


அமிர்தா ரூம்மில் இருக்க எழில் உள்ளே வருகிறார். அங்கு நிலாவிடம் தூங்கலையா? என கேட்க, தூக்கம் வரல என சொல்லுகிறார். அமிர்தாவிடம் எத பத்தியும் யோசிக்காத என சொல்ல, அமிர்தா ரொம்ப பயமா இருக்கு என அழுகிறார். நாம இரண்டு பேரும் ஒரு முடிவா இருந்தா யாராலயும் எங்களை பிரிக்க முடியாது என சொல்லுகிறார். அமிர்தாவும் நீங்க தான் என் வாழ்க்கை, உங்களை விட்டு எங்கையும் போக மாட்டேன் என சொல்லுகிறார்.


மறுபக்கம், ஈஷ்வரியும் தூக்காமல் இருக்க, கோபி அவருக்கு ஆறுதல் சொல்லி தூங்க வைக்கிறார். அந்த நேரத்தில் ராதிகா வந்து, மேல் ரூம் கிளீன் பண்ணியாச்சு நாம அங்க போய் தூங்குவம் என சொல்ல, அதற்கு ஈஸ்வரி அவன் என்கூட தூங்கட்டும் நீ போய் மேல தூங்கு என சொல்ல, கோபி ஒரு மாதிரி சமாதானம் செய்து மேல் ரூமுக்கு செல்கின்றனர்.


இவ்வாறு மேல் ரூமுக்கு சென்ற கோபி, இது ஸ்டார் ரூம் ஆச்சே.. இப்போ ரொம்ப அழகா ரெடி பண்ணி வைச்சி இருக்கா என ராதிகாவிடம் சொல்லுகிறார். மேலும், குடும்பத்தில் நடக்கும் பிரச்சினைகள் பற்றி ராதிகாவிடம் பேசிக் கொள்கிறார். அத்துடன், எழில் வாழ்க்கை வீணா போய்டுமோ என பயப்படுகிறார்.


இதற்கு ராதிகா, இப்போ என் முதல் புருஷன் வந்து நானும் மயூவும் வேணும் என்று சொன்னா நீங்க என்ன பண்ணுவீங்க என அதிர்ச்சி கொடுக்கிறார். அது எப்படி நடக்கும் அது முடிச்ச வாழ்க்கை. இப்போ நாம புது வாழ்க்கை குடும்பமா சந்தோசமா வாழ்ந்திட்டு இருக்கோம் என சொல்ல, அது போல தான் எழில் வாழ்க்கையும் என்று சொல்லி, எல்லாம் சரியாகிடும், கணேஷ்க்கு அது விளங்கினா சரி, இல்ல விளங்க வைப்போம் என ஆறுதல் சொல்லுகிறார்.


மறுநாள் காலையில், நான் காலேஜ்  போகல என இனியா சொல்ல, பாக்கியா வீட்டு பிரச்சினையை நினைச்சி குழம்பாத என ஆறுதல் சொல்லுகிறார். அந்த இடத்திற்கு நிலா வந்து எல்லாரையும் உறவு முறை சொல்லி அழைக்க, எல்லாரும் கண் கலங்கி அழுகின்றனர்.



Advertisement

Advertisement