• Jan 19 2025

'விஷ்ணு, தினேஷ், மணிக்கு சரியான செருப்படி' திடீரென பிரதீப் வெளியிட்ட சர்ச்சைப் பதிவு! திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றது. ஆனாலும் இறுதிவரை செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட பிரதீப் ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பப்பட்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் சூப்பராக விளையாடி வந்தார் தான் பிரதீப். இதனால் இவர் தான் டைட்டில் வின்னர் ஆக வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் கூறி இருந்தனர்.அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்கிற பழமொழிக்கு ஏற்ப, ஓவராக பிக்பாஸ் வீட்டில் பொல்யூட் செய்து விளையாடியதால்,  ஒரேயடியாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். 


இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் தற்போதுள்ள போட்டியாளர்கள் தொடர்பில் சர்ச்சைப் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார் பிரதீப் ஆன்டனி.

அதன்படி, பிக் பாஸ் வீட்டிலுள்ள மணி, விஷ்ணு, தினேஷ் ஆகியோர் நல்ல பெயரை சம்பாதித்தது எல்லா பெண்களும் அவர்களை செருப்பால் அடிப்பது போல் தெரிகிறது என பதிவிட்டுள்ளார்.

தற்போது குறித்த பதிவு வைரலாகி உள்ளது. ஆனாலும், குறித்த ஐடி பிரதீப் உடையது இல்லை, அவர் அவ்வாறு பதிவிட மாட்டார் எனவும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement