• Jan 19 2025

முத்தழகு சீரியல் நடிகையின் காரை மறித்த கிராமத்து பெண்கள்! நடுவழியில் சீரியலை பற்றி விவாதம்? வைரலாகும் வீடியோ

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

தமிழில் பிரபல்யமான தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருப்பது விஜய்  தொலைக்காட்சியாகும். இதில் பல நிகழ்ச்சிகள்மற்றும் சீரியல்கள் என்பன சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கின்றது.

அந்த வகையில் சூப்பர் ஹிட்டாக ஓடும் முக்கிய சீரியல் தான் முத்தழகு. விவசாயம் பார்க்கும் பெண் தவிர்க்க முடியாத ஒரு காரணத்தால் ஊர்த்தலைவியின் மகனான பூமியைத் திருமணம் செய்திருக்கின்றார்.

இதை தொடர்ந்து பூமிக்கு இரண்டு மனைவிகள், அதை எப்படி சமாளிக்கிறார், முத்தழகு என்ன என்ன கஷ்டங்களை அனுபவிக்கிறார் என அழகாக கதையை நகர்த்தி செல்கிறார்கள்.


முத்தழகு சீரியலில் முத்தழகு என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ஷோபனா.

இந்த நிலையில், சென்னை திருவேற்காடு பகுதியில், காரில் சென்றுகொண்டிருந்த நடிகை ஷோபனாவை கூலி வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த பெண்கள் பலரும் வழி மறித்து பேசியுள்ளனர்.

அவர்களை பார்த்த ஷோபனாவும் தனது காரை நிறுத்தி அவர்களிடம் ஆனந்தமாக பேசிக்கொண்டு இருந்துள்ளார். 

அந்த வீடியோவையும் ஷோபனா தனது இன்ஸ்டாவில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். 


Advertisement

Advertisement