• Jan 19 2025

இதனால் தான் இலங்கையில் அசிங்கப்பட்டேன்! இன்ஸ்டாவில் வேதனையை பகிர்ந்த பிரபல சீரியல் நடிகை

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

தமிழில் வெளியான பெண்கள் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை சந்தோஷி.

இதைத்தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் பாபா படத்தில் நடித்த இவர், மாறன், மிலிட்டரி, பாலா உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருந்தார்.

சினிமாவில் மட்டுமில்லாமல் ருத்ரவீணை, இளவரசி, மரகத வீணை உள்ளிட்ட சின்னத்திரை சீரியல்களும் நடித்திருந்தார்.

எனினும் கடந்த சில ஆண்டுகளாக நடிப்பில் இருந்து விலகியுள்ள அவர், தற்போது மேக்கப், பேஷன் என்ற புதிய விஷயங்களில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.

இதன் காரணமாக உள்நாட்டில் மட்டும் இல்லாமல் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட பல நாடுகளுக்கும் சென்று அங்கு பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருகிறார்.


இந்த வகையில் அண்மையில் இலங்கையின் தலைநகரான கொழும்புவில் நடைபெற்ற மேக்கப் செமினார் ஒன்றில் நடிகை சந்தோஷி பங்கேற்று இருந்தார்.

இந்த நிலையில், இலங்கையில் சாப்பாடு விஷயம் ஒன்றின் காரணமாக தான் அவமானப்பட்டதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.

அதாவது, குறித்த நிகழ்ச்சிக்கு எதிர் பார்க்காத வகையில் மக்கள் கூட்டம் அதிகமாக வந்ததனால், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மக்களை கட்டுப்படுத்த முடியாமல் போய் உள்ளது.

இதன் காரணமாக சந்தோஷி உட்பட்ட சிலரை அசைவ உணவு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்ற ஏற்பாட்டாளர்கள், அங்கு அசைவ உணவு பிடிக்காத சந்தோஷிக்கு ஜூஸ் மட்டும் கொடுத்துள்ளார்களாம்.


அதுபோலவே அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கும் சாப்பாடு பார்சல் கொடுக்கப்பட்டதாகவும், ஆனால் அது சரியான நேரத்தில் கொடுக்கப்படவில்லை எனவும் அதிருப்தி அடைந்துள்ளார் சந்தோஷி.

மேலும், இதற்கு முன் தன்னுடைய வகுப்பில் பயின்ற மாணவர்களுக்கு இதுபோல ஒரு கஷ்டம் அனுபவித்ததே இல்லை. நிகழ்ச்சி ஏற்பாட்டார்களால் தான் எனக்கு அசிங்கம் ஏற்பட்டது. சரியான விளம்பரம் செய்யாமல் பெரிய ஏமாற்றத்தை தனக்கு ஏற்படுத்தி  கொடுத்துள்ளதாக சந்தோஷி குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,


Advertisement

Advertisement