• Jan 19 2025

அவசர சிகிச்சையில் அண்ணாமலை... மீனாவை திட்டி தீர்க்கும் விஜயா...பதறியடித்து ஓடி வரும் முத்து... இனி நிகழ போவது என்ன?

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இனி என்ன நடக்க போகிறது என பார்ப்போம் வாங்க.

அண்ணாமலைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு உடம்பு சரியில்லாம போகுது அப்போ மீனா என்ன செய்றதுன்னு தெரியாம முத்துக்கு கால் பண்ணுறாங்க முத்து கால் எடுக்கவே இல்ல மீனா அவசரமா ஒரு ஆட்டோ கூட்டிட்டு வந்து அண்ணாமலைய ஹாஸ்ப்பிட்டல் கூட்டிட்டு போறாங்க.

அங்க டாக்டர் கேட்கும் போது மீனா வீட்டுல கொசு மருந்து அடிச்சாங்க அதுனால மாமாக்கு மூச்சு திணறல் வந்துருச்சி என்று அழுதுகிட்டே சொல்லுறாங்க.  மறுபடி மறுபடி மீனா, முத்துவுக்கும் விஜயாவுக்கும் கால் பண்ணிட்டு இருக்கிறாங்க.

விஜய்யா மீனா தானே கால் பண்ணுறா இவ கால  ஏன் எடுக்கணும் என்று கட் பண்ணுறாங்க. மீனா சத்தியாவை கூப்பிட்டு கைல போட்டு இருந்த வளையலை கழட்டி கொடுத்து அடமானம் வச்சிபணம் எடுத்துட்டு வாடா ஹோஸ்ப்பிட்டல்க்கு காசு கட்டணும் என்று சொல்கிறார்.


அப்போ  சத்தியா உன் வீட்டு தேவைக்கு உன் நகையத்தான் வைக்கணுமா நான் பணம் தாரேன் என்று சொல்கிறார். மாமாவுக்காக இந்த ஒரு முறை வச்சிட்டு பணம் எடுத்துட்டுவானு மீனா சொல்லுறாங்க. விஜயா வீட்டுக்குவந்ததும் அண்ணாமலையை ஹாஸ்ப்பிட்டல் கொண்டு போய்ட்டாங்க என்று சொல்ல விஜய்யாவும் பார்வதியும் பதறி போய் ஹாஸ்ப்பிட்டல் போகிறார்கள்.

வீட்டுலதானே இருக்க மாமாவை பாத்துக்க மாட்டியா என்று திட்டுகிறார். அப்போது வெளியே வந்த டாக்டர் கொசு மருந்து நாளத்தான் இப்படி நடந்து இருக்கு என்று சொல்கிறார். விஜயா மீனாவை கண்ட படி திட்டுகிறார் உங்க வீட்டுல கொசு இல்லையா ஏதோ கொசு கடில தூங்காதவமாதிரி கொசு மருந்து அடிச்சி இருக்கனு திட்டுகிறார்.


மீனா நடந்ததை சொல்ல பார்க்குறாங்க விஜயா கேட்குற மாதிரி இல்ல.இத கேள்விபட்டு ரோகிணி, மனோஜ் ஹோஸ்பிடலுக்கு வந்து விஜய்யா திட்டுறத பாத்துட்டு கண்ட படி திட்டுறாங்க.

அப்போது மீனா சத்தம் போட்டுகத்தி போதும் நிறுத்துங்க என்ன திட்டுறதுனா எல்லாரும் ஒன்னு சேந்துக்கிறிங்க கொசு மருந்து நான் அடிக்கல அடிச்சது சுருதி. சொல்ல சொல்ல கேட்காம கொசு மருந்து அடிச்சாங்க என்று சொல்கிறார். 

பிறகு முத்து ஓடி வந்து அப்பாக்கு என்னாச்சி இப்ப அப்பா எப்படி இருக்காரு என்று கேட்கிறார் அதற்கு  விஜயா மீனாத்தான் எல்லாம் செஞ்சிட்டு சுருதி மேல பலிய போடுறானு சொல்லுறாங்க. முத்து மீனாகிட்ட போய் நடந்தது எல்லாம் கேட்டு தெரிஞ்சிக்கிறாரு அப்புறம் டாக்டர் வந்து அண்ணாமலை இப்போ நல்லா இருக்காரு என்று சொல்கிறார்.     

Advertisement

Advertisement