• May 25 2025

"டூரிஸ்ட் பாமிலி" படத்தில் தளபதி விஜய் பாடல்..! இதன் பின்னணி என்னவாக இருக்கும்..?

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் சமீபத்தில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் "டூரிஸ்ட் பாமிலி". இந்தப் படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் அபிஷன் ஜீவந்த், சமூக விழிப்புணர்வு மற்றும் குடும்பக் கதைக்களத்தை கலந்தும் காட்டும் வகையில் ஒரு தனித்துவமான படைப்பை வழங்க முயன்றுள்ளார்.


இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் சசிகுமார் மற்றும் சிம்ரன் நடித்துள்ளனர். குடும்பத்துக்கேற்ற கதையமைப்பில் உருவாகியுள்ள இப்படம் மே மாதம் 1ம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ரசிகர்களிடையே இதற்கான எதிர்பார்ப்பு உருவாகி வரும் நிலையில், தற்போது வெளியாகியிருக்கும் ஒரு தகவல் அந்த எதிர்பார்ப்பை மேலும் மெருகூட்டியுள்ளது.


நடிகர் விஜய் கடந்த சில வாரங்களுக்கு முன் தனது அரசியல் பயணத்திற்காக "தமிழர் வெற்றி கழகம்" என்ற பெயரில் ஒரு கட்சியைத் தொடங்கியிருந்தார். இந்த கட்சி தொடங்கியதிலிருந்து விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். இந்நிலையில், "டூரிஸ்ட் பாமிலி" திரைப்படத்தில் விஜய் தொடங்கிய கட்சி சார்ந்த பாடல் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

Advertisement