சின்னத்திரை உலகில் ஒரு காலத்தில் அனைத்து மக்களின் மனங்களையும் கவர்ந்தவர் தான் நடிகை நந்தினி. 'சரவணன் மீனாட்சி' என்ற விஜய் டீவி சீரியலில் மைனா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் பாராட்டுக்களைப் பெற்றார். அந்தக் கதாப்பாத்திரம் ஒரு நகைச்சுவை கலந்த உணர்வு பூர்வமானதாக காணப்பட்டது.
அந்தவகையில் நந்தினி ‘சரவணன் மீனாட்சி’ சீரியல் மூலம் பெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து இயக்குநர் பாண்டிராஜ் இயக்கிய ‘வம்சம்’ திரைப்படத்தில் முக்கிய காமெடி வேடத்தில் நடித்து அனைவரையும் ரசிக்க வைத்திருந்தார்.
பின்னர், விஜய் டீவி நிகழ்ச்சி 'பிக்பாஸ்' சீசன் 6ல் போட்டியாளராக கலந்து கொண்டார். எனினும், அதன் பிறகு நந்தினி சின்னத்திரையில் எந்த சீரியல்களிலும் நடிக்கவில்லை. இதனால், 'நந்தினி இனிமேல் சீரியல்களில் நடிக்க மாட்டாரா?' எனப் பலரும் யூகிக்கத் தொடங்கினார்கள்.
இந்நிலையில், நடிகை நந்தினி அண்மையில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேட்டி அளிக்கும் போது, தனது சீரியல் பங்கேற்பு குறித்த கேள்விக்கு மிகத் தெளிவாக பதிலளித்தார். அவர் கூறியதாவது, "நான் சீரியலை விட்டு விலக வேண்டும் என்று எப்போதுமே முடிவு செய்தது கிடையாது. எனினும் சில வருடங்களாக எனக்கு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. மக்கள் என்னை சினிமாவில் மட்டுமே நடிப்பவளாக நினைத்துவிட்டனர். ஆனால், அது உண்மையில்லை. நான் பார்க்கும் அனைத்து இயக்குநர்களிடமும், தயாரிப்பாளர்களிடமும் 'வேலை தாருங்கள்' என்று கேட்டுக்கொண்டு தான் இருக்கிறேன். சீரியல் வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக நடிப்பேன்." என்று கூறியிருந்தார்.
Listen News!