சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, விஜயா சிந்தாமணி தான் இந்தப் பணத்த எடுத்தது என்று இவங்களுக்கு எப்புடித் தெரியும் என அண்ணாமலையப் பாத்துக் கேக்கிறார். அதுக்கு ரவி அந்த லேடி வீட்ட இருந்து தான் இந்தப் பணத்த எடுத்தனாங்க என்று சொல்லுறார். இதனை அடுத்து நாங்க தான் அந்தப் பணத்த எடுத்தனாங்க என்று ஸ்ருதி சொன்னதக் கேட்ட அண்ணாமலை எப்புடி எடுத்தனீங்க என்று கேக்கிறார்.
அதுக்கு ஸ்ருதி நாங்க வருமான வரித்துறை அதிகாரிகள் மாதிரி நடிச்சுக் கொண்டு போய்த் தான் அந்தப் பணத்த எடுத்தனாங்க என்று சொல்லுறார். இதைக் கேட்ட அண்ணாமலை இதால உங்களுக்கு ஏதாவது பிரச்சன வரப்போகுது என்று சொல்லுறார். அதுக்கு முத்து அதெல்லாம் ஒரு பிரச்சனையும் வராது என்கிறார்.
அதைத் தொடர்ந்து முத்து பணத்த எடுத்துக் கொடுத்ததுக்கு மீனா அவரின்ட கன்னத்தில முத்தம் கொடுக்கிறார். மறுநாள் மீனா கோவிலுக்குப் போய் சீதாவப் பாத்து திருட்டு போன பணம் கிடைச்சிருச்சு என்று சொல்லுறார். அதைக் கேட்ட சீதா ரொம்பவே சந்தோசப்பட்டுக் கொண்டு எப்புடி பணம் கிடைச்சது என்று கேக்கிறார். அதுக்கு மீனா எல்லாம் உன்னோட மாமாவால தான் என்று சொல்லுறார்.
இதைத் தொடர்ந்து சீதா பணம் கிடைச்ச விஷயத்த அருணுக்கு சொல்லுறார். பின் மீனா ஸ்ருதிக்கு சுவீட் செய்து கொண்டு போய் ரெஸ்டாரெண்டில கொடுக்கிறார். அதனை அடுத்து மீனா செய்து கொண்டு வந்த சுவீட்ட அந்த ரெஸ்டாரெண்டுக்கு வந்தவருக்கு கொடுக்கிறார்கள். அதைச் சாப்பிட்டு அவர் ரொம்பவே சூப்பரா இருக்கு என்று சொல்லுறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!