நடிகர் விஜயகாந்த் மறைந்த செய்தி இன்றளவில் மட்டும் மக்கள் மத்தியில் பேசுபொருளாகவே காணப்படுகின்றது. அந்த அளவிற்கு சினிமா பிரபலங்கள், தொண்டர்கள் மட்டுமின்றி பாமர மக்களின் இதயம் வரை விஜயகாந்த நீங்கா இடம்பெற்றுள்ளார்.
இவ்வாறு கடந்த மத்தம் 28ம் திகதி உயிரிழந்த விஜயகாந்தின் இறுதி அஞ்சலியில் நடிகர் விஷால் பங்கேற்கவில்லை. அந்த நேரத்தில் நடிகர் விஷால் வெளிநாட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் இருந்து வந்தார்.
எனினும், விஜயகாந்த் உயிரிழந்த செய்தியை கேட்ட விஷால், என்னை மன்னிச்சிடு விஜயகாந்த் சாமி என உருக்கமாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில், கிட்டத்தட்ட 10 நாட்களுக்குப் பிறகு சென்னை திரும்பிய விஷால், கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.
மேலும், விஜயகாந்த் போலவே மக்களுக்கு அன்னதானம் வழங்கிய காட்சிகள் ரசிகர்களை புல்லரிக்கச் செய்து விட்டன.
இவ்வாறான நிலையில், எப்போதுமே பசியோடு வருபவர்களுக்கு உணவளித்து 9வது வள்ளலாகவே விஜயகாந்த் வாழ்ந்து வந்தார் என பலரும் பாராட்டி வரும் நிலையில், விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய விஷால், அங்கே வந்த பொதுமக்களுக்கும் ரசிகர்களுக்கும் அன்னதானம் வழங்கினார்.
செய்தியாளர்களிடம் பேசிய விஷால், “ கேப்டன் விஜயகாந்த் அண்ணன் திரையுலகில் சிறந்த நடிகராக இருந்தார். சினிமாவில் மட்டுமே அவர் ஒரு அற்புதமான மனிதராக மரியாதை பெற்றார், அவர் ஒரு நல்ல அரசியல்வாதி மற்றும் ஒரு துணிச்சலான அரசியல்வாதி என்று பெயர் பெற்றார், நாம் பொதுவாக ஒரு நபர் இறந்த பிறகு அவரை கடவுள் என்று போற்றுவோம், ஆனால் பலர் அவரை அப்படித்தான் அழைத்தார்கள். உயிரோடு இருப்பதால், எல்லோருக்கும் அவர் செய்த காரியங்கள் வெறும் 2-3 வருட காலத்தில் இல்லை.திருமூர்த்தி படத்தைப் பார்த்தால், நம்மைப் போன்றவர்களுக்கும், அவர் செய்த நல்ல செயல்கள் எல்லாம் தெரியும். பொது. அவர் தனது நற்செயல்கள் மற்றும் அனைவருக்கும் சேவைகள் மூலம் எவ்வாறு முன்மாதிரியாக செயல்பட்டார் என்பதை படத்தின் வரவுகளில் நீங்கள் பார்க்கலாம்."
"நான் இங்கு இல்லாததால் வந்து இறுதி அஞ்சலி செலுத்த முடியவில்லை. நான் இங்கு இருந்திருந்தால் மன்னித்துவிடு என்று கூறியிருப்பேன். நான்.அவரது கடைசி நேரத்தில் அவருக்குப் பக்கத்தில் இருந்திருக்க வேண்டும், ஆனால் அது சாத்தியமில்லை.அவரது குடும்பத்திற்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன், அவர்களுக்கு மனதளவிலும் உடலளவிலும் பலம் தேவை, 'கேப்டன்' அய்யாவின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். இன்றைக்கு நம்முடன் இல்லை, ஆனால் அவர் என்றும் நம் இதயத்தில் நிலைத்திருப்பார், சமூக சேவையை யார் வேண்டுமானாலும் செய்யலாம், அவரை நினைவுகூர்வோம். முதலில் எம்ஜிஆர் அய்யாவை நினைவு செய்வோம், பிறகு கேப்டன் அய்யாவை நினைவு கூர்வோம். .என்றார் ''
இதேவேளை, விஜயகாந்த் போலவே விஷாலும் சாப்பாடு போடுறாரே.. என்ன அவருக்குள்ள விஜயகாந்த் ஆவி இறங்கிடுச்சா? என சோஷியல் மீடியாவில் ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!