• Apr 15 2026

மக்களுக்கு இப்படி செய்றது புடிக்காது... பிரதீப் வந்து சொன்னா என்ன செய்விங்க?- அறிவுரை கூறும் தினேஷ்... கண்டுகொள்ளாமல் இருக்கும் அர்ச்சனா... BIGG BOSS-7

shali / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் ப்ரோமோவிற்கு பிறகு தினேஷ் மற்றும் அர்ச்சனா பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அப்போது தினேஷ் அர்ச்சனாவிடம் என்ன அர்ச்சனா இப்ப எல்லாம் ஒரே மாயா கூடவே இருக்கீங்க, ரொம்ப பிரண்டாகிட்டிங்க? எங்க போனாலும் ஒன்னாத்தான் போறீங்க அந்தளவு நெருக்கமாகிட்டிங்களா? என்று கேட்கிறார். 


அதற்கு அர்ச்சனா ஆமா இந்த வீட்டுல அவங்க தான் என் கூட ஒழுங்கா பேசுறாங்க அதுனாலதான் அவங்க கூட இருக்கிறேன் என்று கூறுகிறார். அதற்கு பிறகு தினேஷ் மறுபடியும் அவங்க யார் கூட எல்லாம் இருக்குறாங்களோ அவங்க நிலைமை எப்படி மாறிட்டு என்று தெரியுமா?


அடுத்த நாளைக்கு இந்த வீட்டில் இல்லாம போயிருவாங்கா பிரதீப், விசித்ரா இப்படி சொல்லிகிட்டே போகலாம். மறுபடி பிரதீப் வந்து மாயா நீ பெரிய சதிகாரி என்ன ஏமாத்திட்ட, உன்ன வெளிய மக்கள் கண்டபடி திட்டுறாங்க என்று  சொன்னால் நீ என்ன செய்விங்க என்று கேட்கிறார். அதற்கு அர்ச்சனா அப்புறம் என்ன பேசமாட்டான் விட்டுருவன் என்று கூறுகிறார். 


அதற்கு தினேஷ் அப்படி செய்ய கூடாது எப்போவும் ஒரே மாதிரி இருக்கணும், மாயாவை பற்றி யாரும் தப்பா சொல்லிட்டா உடனே அவங்களோட கதைக்கிறத விடக்கூடாது எப்போதும் ஒரேமாதிரி இருக்கணும் கமல் சார் சொல்லுறமாதிரி அடிக்கடி மாறிக்கிட்டே இருக்கீங்க, அப்படி இருக்கக்கூடாது யாருக்காகவும் எங்களை மாத்திக்க கூடாது அப்படி செய்றது மக்களுக்கு பிடிக்காது என்று கூறுகிறார்.      

Advertisement

Advertisement