• Jan 19 2025

நம்ம வர்ஷா பொல்லம்மாக்கு என்னாச்சு ?குழம்பிப் போயுள்ள ரசிகர்கள் !

Thisnugan / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ்,மலையாளம் மற்றும் தெலுங்கு திரைத்துறையில் அறியப்படும் நடிகை வர்ஷா பொல்லம்மா இளம் நடிகைகள் வரிசையில் தனக்கான அங்கீகாரத்தை நோக்கி செல்லும் ஓர் நடிகையாக விளங்குகிறார்.தமிழில் சிறிய பட்ஜெட் படங்களில் நடித்ததன் மூலம் அறிமுகமான இவருக்கு தளபதியின் "பிகில்" திரைப்படம் ஓர் அங்கீகாரத்தை கொடுத்தது.

கண் தானம் செய்த 96, பிகில் பட நடிகை வர்ஷா! – News18 தமிழ்

தொடர்ந்து விஜய் சேதுபதியின் "96" படத்தில் நடித்த வர்ஷாவிற்கு அடுத்தடுத்து மலையாளம் மற்றும் தெலுங்கு திரையுலகில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.கிடைத்த வாய்ப்புகளை சரிவர பயன்படுத்தி அடுத்தடுத்த படங்களில் பணியாற்றி வரும் வர்ஷா தற்பொழுது "மானே நம்பர் 13" மூலம் கன்னடத்திலும் அறிமுகமாகியிருந்தார்.


எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் வர்ஷா பொல்லம்மா தற்போது தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருக்கும் பதிவு ரசிகர்களை குழப்பியுள்ளது.ப்ரோக்கன் ஹார்ட் ஸ்டிக்கருடன் வர்ஷா பகிர்ந்திருக்கும் குறித்த பதிவு வருமாறு; "நாம் குழந்தைகளாக இருந்தபோது, ​​ஆசிரியர்கள்/பெற்றோர்கள் நம்மை விளையாட்டாக இருக்கச் சொன்னது நினைவிருக்கிறதா? விஷயங்களை விளையாட்டு முறையில் அணுகவா ? சரி, விளையாட்டுகள்  இனிமேல் விளையாட்டு அல்ல".


Advertisement

Advertisement