• Oct 08 2024

நாக சைதன்யா - சோபிதா துலிபாலா நிச்சயதார்த்த போட்டோவை வெளியிட்ட நாகர்ஜுனா!

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமாக காணப்படும் நாகர்ஜுனாவின் மகன் தான் நாக சைதன்யா. இவர்களுக்கு தமிழ்நாட்டில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் காணப்படுகிறது.

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு வெர்ஷன் பண்ணும் போது நாக சைதன்யாவும் நடிகை சமந்தாவும் காதலித்தார்கள். அதன் பின்பு இரு வீட்டாரின் சம்மதத்துடன் 2017 ஆம் ஆண்டு இருவருக்கும்  கோலாகலமாக திருமணம் செய்து வைக்கப்பட்டது.

எனினும் இவர்களுடைய திருமண வாழ்க்கை நிலைக்கவில்லை நான்கு ஆண்டுகளிலேயே முடிவுக்கு வந்தது. 2021 ஆம் ஆண்டு சட்டபூர்வமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தார்கள். அதன் பின்பு தமது கேரியரில் கவனம் செலுத்தி வந்தார்கள்.

அதன்பின்பு நாக சைதன்யா பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நடிகை சோபிதா துலிபாலாவுடன் கடந்த சில ஆண்டுகளாக டேட் செய்து வந்தார். இது குறித்து ஊடகங்களில் கேள்வி மேல் கேள்வி கேட்கப்பட்ட போதும் புன்னகையை மட்டும் பதிலாக கொடுத்து நழுவி வந்தார்கள்.


இந்த நிலையில், நாக சைதன்யா சோபிதா துலிபாலா இடையே நிச்சியதார்த்தம் நடைபெற்றுள்ளது. தற்போது நிச்சியதார்த்த புகைப்படங்களை நாகர்ஜுனா தனது சோசியல் மீடியாவில் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தற்போது நாக சைதன்யாவுக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள். மேலும் இவர்களுடைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.


Advertisement