• Jan 19 2025

பிரபல நடிகர் சேரன் வீட்டிலும் திருமண கொண்டாட்டம்! நேரில் ஆஜரான இயக்குநர்கள் யாருன்னு தெரியுமா?

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராகவும், நடிகராகவும் காணப்படுபவர் தான் சேரன். இவரின் மூத்த மகளுக்கு நேற்றைய தினம் திருமணம் பிரம்மாண்டமாக நடந்துள்ளது.

கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்புதான் பிரபல இயக்குனரான ஷங்கரின் மகள் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அவருக்கு இது இரண்டாவது திருமணமாக இருந்தாலும் இதில் நயன்தாரா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல், சூர்யா, விக்ரம் என தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.


அதுமட்டுமின்றி ஷங்கர் மகளின் திருமணத்திற்கு விஜய் கலந்து கொள்ளாத நிலையில், அவருக்கு பதிலாக அவரது மனைவி சங்கீதா கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியிருந்தார். இது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்த நிலையில், தற்போது இயக்குனரும் நடிகருமான சேரனின் மூத்த மகளின் திருமணம் பிரம்மாண்டமாக நடந்துள்ளது. இதில் தமிழ் திரை உலகை சேர்ந்த பலரும் திரளாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உள்ளனர்.


அதன்படி சேரனின் மூத்த மகள் நிவேதா பிரியதர்ஷினிக்கு சுரேஷ் ஆதித்யா என்பவர் உடன் சென்னை மயிலாப்பூரில் இந்த திருமணம் நடந்துள்ளது.

இந்த திருமணத்தை இயக்குனர்கள் ரவிக்குமார், பாரதிராஜா, சீமான் ஆகியோர் முன்னின்று நடத்திக் கொடுத்துள்ளார்கள். தற்போது அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வரகையில் சேரன் புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார்.

இதேவேளை இன்றைய தினம் மஞ்சுமெல் பாய்ஸ் நடிகருக்கும் டாடா பட நடிகைக்கும் திருமணம் மிக எளிமையாக நடைபெற்று முடிந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement