• Jan 18 2025

மஞ்சுமல் பாய்ஸ் மீது போடப்பட்ட திடீர் வழக்கு! ஏமாற்றிய தயாரிப்பாளர்! விசாரிக்கும் படி நீதிமன்றம் உத்தரவு!

Nithushan / 8 months ago

Advertisement

Listen News!

கடந்த பெப்ரவரி மாதம் ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த திரைப்படம் மஞ்சுமல் பாய்ஸ் ஆகும். உலகளவில் 200 கோடிக்கு மேல் வசூல்செய்து சாதனை படைத்ததோடு மலையாளத்தில் 200 கோடியை அடித்த முதல் திரைப்படம் என்ற பெருமையும் கொண்டது. 


இந்த திரைப்படத்தை சிதம்பரம் இயக்கியதோடு சுஷின் ஷ்யாம் இசையமைத்தும் இருந்தார். கமல் நடித்த குணா திரைப்படத்தில் காட்டப்படும் குகையில் சிக்கும் தனது நண்பனை காப்பாற்றிய நண்பர்களின் உண்மை கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


சிராஜ் வலியத்தரா என்பவருக்கு மஞ்சும்மெல் பாய்ஸ் திரைப்படத்தின் லாபத்தில் 40% பங்கு தருவதாகவும் , அதற்காக 7 கோடி வரை  முதலீடாக பெற்று ஏமாற்றியதாகவும் படத்தின் தயாரிப்பாளர்கள் மீது அரூரைச் சேர்ந்த சிராஜ் வலியத்தரா என்பவர் புகார் அளித்துள்ளார். இதற்கு எர்ணாகுளம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து மரடா போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement