• Nov 21 2025

சூர்யாவின் ‘கருப்பு’ படத்தில் பெரிய திருப்பம்! படக்குழுவின் பிளானை வெளிக்கொணர்ந்த அந்தணன்

subiththira / 2 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சூர்யா நடிப்பில் உருவாகும் ‘கருப்பு’ திரைப்படம் சமீபத்தில் ரசிகர்களிடையே மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படம், தற்பொழுது போஸ்டர் மற்றும் பாடல்கள் மூலம் பேசுபொருளாகி வருகிறது. 


இந்நிலையில், பிரபல விமர்சகர் வலைப்பேச்சு அந்தணன் கூறிய தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்தணன் பகிர்ந்த தகவலின் படி, இந்தப் படம் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான ‘காந்தாரா’ திரைப்படம் போன்றதாக உருவாக்கப்படுகிறது என்றார். அதாவது, ‘கருப்பு’ படத்தில் சூர்யாவுக்கு கருப்பசாமி வருவது போல சீன் உள்ளது. ஆனால் அந்தக் காட்சியை தற்போது காந்தாரா பாணியில் சண்டைக் காட்சியாக மாற்ற படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார். 


சினிமா ரசிகர்கள் ‘கருப்பு’ என்பது கலாச்சார ருசி, ஆக்ஷன், தெய்வீக காட்சி ஆகியவை கலந்திருக்கும் என்று எதிர்பார்க்கின்றனர். தற்போது வெளியாகிய தகவல் படக்குழுவின் திட்டத்தை சிறப்பாக வெளிப்படுத்துகிறது. 

அத்துடன் இந்தப் படம், ரசிகர்களுக்கு ஒரு பெரிய திருப்பம் மற்றும் மாஸ் சினிமா கலந்த அனுபவம் அளிக்கும் என்பதை படக்குழுவும், விமர்சகர்களும் உறுதிப்படுத்துகின்றனர்.

Advertisement

Advertisement