• Jan 19 2025

விஷப்பரீட்சையில் தைரியமாக இறங்கிய மீனா... கண்னை மூடிக்கொண்டு செய்த காரியம்?

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் கதாநாயகியாக வலம் வருபவர்தான் கோமதி பிரியா. இவர் மீனாவாக நடித்து பல்வேறு ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டே விட்டார். இவருக்கு என்று தனியாக ரசிகர்  பட்டாளமே உண்டு.

மதுரையைச் சேர்ந்த இவர், ஆரம்பத்தில் மிகவும் கஷ்டப்பட்ட நிலையில் இருந்து படிப்படியாகவே தற்போது இந்த நிலையை அடைந்துள்ளதாக அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் மிகவும் சாதாரணமாக கூறியிருந்தார்.


சிறகடிக்க ஆசை சீரியல் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. இந்த சீரியலில் அவரின்  அப்பாவித்தனமும், குடும்பத்தை இவர் சகித்துக் கொண்டு நடக்கும் யதார்த்தமும் மக்களுக்கு மிகவும் பிடித்தே விட்டது.


அதேபோல மலையாளத்திலும் பிரபல சீரியல் ஒன்றில் நடித்து வருகிறார் கோமதி பிரியா. அது தொடர்பிலான புகைப்படங்கள், வீடியோக்கள், ரிலீஸ் என்பவற்றையும் அடிக்கடி வெளியிட்டு  ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.


இந்த நிலையில், தற்போது மலையாளத்திலும் சிறகடிக்க ஆசை சீரியலில் பூ கட்டுவது போலவே அதிலும் கண்ணை மூடிக்கொண்டு பூ கட்டி உள்ளார்.

தற்போது குறித்த காணொளியை அவர் வெளியிட்ட நிலையில், இதை பார்த்த ரசிகர்கள் மீனாவுக்கு இவ்வளவு டேலண்ட் இருக்குதா?  கண்ணை மூடிக்கொண்டு பூ கட்டுறாங்களே என வியந்து வருகிறார்கள்.

Advertisement

Advertisement