விலையுயர்ந்த “ஓஜி” வகை கஞ்சா விற்பனை தொடர்பான முக்கிய வழக்கில் தொழில் அதிபர் உட்பட மூன்று பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். அதிகாரிகள் தெரிவித்ததற்கு ஏற்ப, சோதனையின் போது 27.5 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது வழக்கில் முக்கிய சாட்சியமாக அமைந்துள்ளது.
இந்த வழக்கில் கைதானவர்களில் முக்கியமானவர்கள் அதிமுக வியூக அமைப்பாளர்கள் ஹரி மற்றும் சாய், மற்றும் திரைப்பட இணை தயாரிப்பாளர் ஷர்புதீன் ஆகியோர். விசாரணையை நடத்திய பொலிஸார், இந்த வழக்கு பொதுமக்களுக்கான ஒரு விழிப்புணர்வு மற்றும் போதை வியாபார எதிர்ப்பு நடவடிக்கை என்று கூறியுள்ளனர்.

குறிப்பாக, ஷர்புதீன் நடிகர் சிம்பு நடித்த “ஈஸ்வரன்” படத்தின் இணை தயாரிப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்பொழுது இத்தகவல் திரை உலகிலும் அரசியல் வலயங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது, நீதிமன்றத்தில் முறையான விசாரணையும் மேற்கொள்ளபப்டுகிறது.
Listen News!