• Nov 21 2025

"செம்மி" படத்திற்காக தன்னையே அர்ப்பணித்த கோவை சரளா.! இயக்குநர் ஓபன்டாக்.!

subiththira / 1 hour ago

Advertisement

Listen News!

பிரபு சாலமன் இயக்கத்தில் உருவான புதிய தமிழ் திரைப்படம் “செம்பி”, திரை உலகில் வித்தியாசமான இடத்தை பெற்றிருந்தது. கோவை சரளா, அஸ்வின் குமார், தம்பி ராமையா, நாஞ்சில் சம்பத் ஆகியோர் நடித்த இப்படம் 30 டிசம்பர் 2022 அன்று திரையரங்குகளில் வெளியாகி, தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.


இந்நிலையில், இயக்குநர் பிரபு சாலமன் அண்மை நேர்காணலில், திரைப்படத்தில் நடித்த கோவை சரளா குறித்த தனது அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். அதாவது, “செம்பி படத்தில் உள்ள தேன் எடுக்கும் காட்சி பார்ப்பதற்கு அருமையாக இருக்கும். அந்தப் பட காட்சி எடுக்கும் போது கோவை சரளா மேடம் 5 மணி நேரம் மரத்தின் மேலே இருந்தார். சாப்பாடு கூட அங்கேயே தான். அவரின் அர்ப்பணிப்பு மற்றும் திறமை அற்புதமாக இருந்தது.” எனக் கூறியுள்ளார்.


இந்த நேர்காணல் மூலம், கோவை சரளா தனது கதாபாத்திரத்தில் முழுமையாக மூழ்கியுள்ளார் என்பது தெரியவருகிறது. 5 மணி நேரம் மரத்தின் மேலே இருந்து காட்சி எடுக்கிறதற்கு, எந்தவொரு பயமும் இல்லாமல், அவர் முழுமையான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இது அவரது நடிப்பு மற்றும் தொழில்முறை ஒழுக்கத்தை வெளிப்படுத்துகிறது.

Advertisement

Advertisement