• Jan 19 2025

'அவ மேல காரிதுப்புங்க ..' திடீரென அர்ச்சனாவை அசிங்கப்படுத்திய விக்ரம்! அனல்பறக்கும் வீடியோ

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் மேலும் சூடு பிடிக்கின்றது. அதிலும் சனி, ஞாயிறு கமல் தொகுத்து வழங்கும் காட்சியை  பார்ப்பதற்கென தனி ரசிகர் கூட்டமே காத்திருக்கும்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிராந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்கள் இந்த நிகழ்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். 


இறுதியாக பிக்பாஸ் வீட்டில் நடந்த பூகம்பம் டாஸ்கில் ஹவுஸ் மேட்ஸ் தோற்றதால் இரண்டு போட்டியாளர்கள் வெளியே செல்வதும், அவர்களுக்கு பதிலாக இரண்டு போட்டியாளர்கள் உள்ளே வருவதும் உறுதியானது.

அதன்படி, வைல்ட் கார்டு எண்ட்ரி மூலம் விஜய் வர்மா மற்றும் அனன்யா பிக் பாஸ் வீட்டிற்கு உள்ளே நுழைய, அக்‌ஷயா மற்றும் பிராவோ ஆகிய இருவரும் வெளியேற்றப்பட்டனர்.

அதேபோல, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து யாரும் எதிர்பார்க்காத விதமாக ஜோவிகா நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டு, வெளியேறினார்.

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டிலுள்ள விக்ரம், அர்ச்சனாவை வேணுமென்றே  வம்பு இழுக்கும் வகையில் பேசிய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.


அதாவது, பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட டாஸ்கில், பொம்மையாக இருக்கும் அர்ச்சனாவிடம் ரவீனா, விஷ்ணு, கூல் சுரேஷ், விசித்ரா என ஒவ்வொருவரையும் பற்றி கேட்கும் வீடியோ வெளியாகியுள்ளது. 

இவ்வாறான நிலையில், விக்ரம் அர்ச்சனாவை வேணும் என்றே வம்பு இழுக்கும் வகையில் விஷ்ணுவிடம் அந்த பொம்மைக்கு கைக்குடுடா, இப்ப காரிதுப்பு என சொல்கிறார்.  தற்போது, குறித்த வீடியோ வைரலாகி வருகின்றது. 


Advertisement

Advertisement