• Jan 19 2025

விஜய்யின் கோட் திரைப்பட வைரல் புகைப்படம்... அட நடிகை சினேகாகூட யார் இருக்காங்க பாருங்க...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய்யின் கோட் படத்தின் படப்பிடிப்பு பற்றிய தகவல் அதிகம் வருகிறதோ இல்லையோ இப்போதெல்லாம் அவரது அரசியல் பிரவேசம் குறித்து தான் செய்திகள், பிரபலங்களின் கருத்துக்கள் சமூக வலைதளங்களில் அதிகம் வலம் வருகின்றன. இந்நிலையில் கோட் திரைப்பட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.


தமிழக வெற்றி கழகம் என்று பெயரிடப்பட்டுள்ள விஜய்யின் கட்சிக்கு ஒருபக்கம் நிறைய வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இன்னொரு பக்கம் விஜய்யின் கோட் படத்தின் படப்பிடிப்பும் பிஸியாக நடந்து வருகிறது. முக்கிய பிரபலங்கள் கொண்டு படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில். 


பாண்டிச்சேரியில் கோட் படத்தின் படப்பிடிப்புகள் நடக்க விஷயம் தெரிந்து ரசிகர்களும் அங்கு குவிந்துவிட்டார்கள். இதனால் விஜய்யும் தன்னை பார்க்க வந்த ரசிகர்களை நேரில் சந்தித்து சந்தோஷப்படுத்தியுள்ளார். 


இந்த நிலையில் விஜய்யின் கோட் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து இரண்டு முக்கிய நடிகர்கள் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. 

Advertisement

Advertisement