மறைந்த நடிகர் விஜயகாந்த் அவர்களின் மகன் சண்முக பாண்டியன் நடித்துள்ள புதிய திரைப்படம் ‘கொம்புசீவி’, தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த படத்தின் டீசர் நாளை (அக்டோபர் 11) வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கிடையில், படம் தொடர்பான தகவல்களும், புதிய still-களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’, ‘சீமராஜா’ போன்ற ஹிட் படங்களை இயக்கிய பொன்ராம், தற்போது சண்முக பாண்டியனை வைத்து இயக்கியுள்ள புதிய படம் தான் ‘கொம்புசீவி’.
இதுவரை நகைச்சுவை, குடும்பம், மற்றும் கிராமத்து கதைகள் மூலம் ரசிகர்களை கவர்ந்த Ponram, இந்த முறை அதே பாணியில் ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார். இதில் மறைந்த விஜயகாந்தின் வாரிசாக திரையில் களமிறங்கிய சண்முக பாண்டியன், இந்தப் படத்தின் மூலம் புதிய மாஸ் ஹீரோவாக ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தைக் காட்டவுள்ளார் எனக் கூறப்படுகிறது.
Listen News!