தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவரான மிஸ்கின், சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டு, நடிகர் மற்றும் நாம் தமிழர் கட்சி தலைவரான சீமான் பற்றிய கருத்துகளை பகிர்ந்துள்ளார்.
அவர் கூறிய கருத்துகள், சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, சினிமா ரசிகர்கள் மற்றும் அரசியல் ரசிகர்களிடையே நகைச்சுவையையும் ஏற்படுத்தியுள்ளது.
பேட்டியில், சீமான் குறித்த எண்ணங்களை பகிர்ந்த இயக்குநர் மிஸ்கின், "சீமான் அண்ணன் பெண்ணாக பிறந்திருந்தால் கூட அழகாகத் தான் இருந்திருப்பார். அவருடைய பேச்சில் ஒரு மயக்கமுண்டு. அந்த மாதிரி பேச்சுக்கு 20 பேர் பின்னாலேயே வந்திருப்பார்கள்." என்று கூறியிருந்தார். இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பார்த்த ரசிகர்கள் பலரும் இதனை ஷார் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!