• Feb 09 2026

பராசக்தியில் நடிச்சது ரொம்பவே திருப்தியா இருக்கு.! நடிகை ஸ்ரீலீலா ஓபன்டாக்.!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படங்கள் பெரும்பாலும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பையும், வெற்றியையும் ஏற்படுத்தி வருகிறது. அந்தவகையில், சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான புதிய திரைப்படமான ‘பராசக்தி’ பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 10-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம், தமிழ் திரையுலகில் மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கப்பட்டது.

‘பராசக்தி’ திரைப்படத்தில், சிவகார்த்திகேயனுடன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். 


பராசக்தி படத்தில் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்து, பலரின் பாராட்டை பெற்ற ஸ்ரீலீலா தனது கதாபாத்திரத்திற்கு கிடைக்கும் வரவேற்பு குறித்து நெகிழ்ச்சியுடன் தற்பொழுது பேசியுள்ளார்.

அவர் அதன்போது, “என்னுடைய டான்ஸ், பாடலுக்கு பாராட்டுகள் வருவது எனக்கு பழகிவிட்டது. ‘பராசக்தி’ படம் மூலமாக, முதல் முறையாக நான் நடித்த கதாப்பாத்திரத்திற்கு பாராட்டு வருகிறது. இது தமிழ் சினிமாவில் எனக்கு மிகச்சரியான அறிமுகப் படம் எனத் தோன்றுகிறது. மிகவும் திருப்தியாக உள்ளது.” என்று கூறியுள்ளார். 

இது, ஸ்ரீலீலாவின் கலைப்படைப்பில் புதிய அத்தியாயத்தை தொடங்கும் விதமாக கணிக்கப்படுகின்றது. அத்துடன், இந்த கருத்துகள் தற்பொழுது வைரலாகி வருகின்றது. 

Advertisement

Advertisement