தமிழ் சினிமா ரசிகர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருந்த ஒரு கனவு கூட்டணி மீண்டும் திரையில் ஒன்றிணைந்துள்ளது. நடனப் புயல் பிரபுதேவா மற்றும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் தான் ‘மூன்வாக்’. இந்த அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே, படம் குறித்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
‘மூன்வாக்’ திரைப்படத்தை என்.எஸ். மனோஜ் இயக்கியுள்ளார். இவர், இந்த படத்தின் மூலம் ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான சினிமா அனுபவத்தை வழங்க முயற்சி செய்துள்ளதாக படக்குழு தெரிவிக்கிறது. குறிப்பாக, நடனத்தையும் இசையையும் மையமாகக் கொண்ட இந்த படம், தமிழ் சினிமாவில் தனி இடத்தைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரபுதேவா – ஏ.ஆர்.ரகுமான் இணைப்பு என்றாலே, நடனமும் இசையும் உச்சத்தில் இருக்கும் என்பது ரசிகர்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில், ‘மூன்வாக்’ படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த திரைப்படத்தில், பிரபுதேவாவுடன் இணைந்து, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன் மற்றும் லொள்ளு சபா சுவாமிநாதன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களின் நடிப்பு, படத்திற்கு நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக யோகி பாபு மற்றும் ரெடின் கிங்ஸ்லி இணைப்பு, ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘மூன்வாக்’ திரைப்படம் அடுத்தாண்டு கோடை விடுமுறையில் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போது படக்குழு ரசிகர்களுக்கு ஒரு பெரிய சர்ப்ரைஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் ‘மூன்வாக்’ படத்தில் இடம்பெற்றுள்ள 5 பாடல்கள், நாளை (ஜனவரி 13) மாலை 4 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதும், சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் உற்சாகத்தில் காணப்படுகின்றனர்.
Listen News!