தமிழ் சினிமா மற்றும் தொலைக்காட்சி ரசிகர்களுக்கு பரிச்சயமான நடிகர் அஜய் ரத்னம், தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் “முத்து வேல்” என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சீரியலில் அவரின் நடிப்பு மற்றும் உணர்ச்சிபூர்வமான காட்சிகள் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் புகழை வழங்கியுள்ளது. ஆனால், இவரது நடிப்பு திறமையால் மட்டுமல்ல; தற்போது அவர் விளையாட்டு உலகிலும் சாதனை படைத்து உலகையே கவர்ந்துள்ளார்.

சமீபத்தில், 60 வயதான அவர், 34வது தேசிய பஞ்ச் பென்ச் வேயிட் லிப்டிங் சாம்பியன்ஷிப்-ல் கலந்துகொண்டு தங்கம் வென்றுள்ளார். இது அவரது தீவிரமான பயிற்சி மற்றும் உடல்நலம் பராமரிப்பு முறைகளை வெளிப்படுத்துகிறது.
அஜய் ரத்னம் அதன்போது, “60 வயதிலும் இந்த வெற்றி பெறுவதற்கு காரணம், ஒழுங்காக செய்யும் தீவிர பயிற்சிகளே.” என்று கூறியிருந்தார்.
இந்த சாதனை, முன்பு தமிழ்நாடு அளவிலான பவர்லிப்ட்டிங் பென்ச் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற அனுபவத்தையும் நினைவுகூர்த்துகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!