பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் கடந்த வருடம் தொடங்கி, தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சீசனில் பங்கேற்றவர்களில் தற்போது சபரி, அரோரா, விக்ரம் மற்றும் திவ்யா ஆகிய நான்கு போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். சீசனின் நடுவில் பல திருப்பங்கள், சண்டைகள், நகைச்சுவை மற்றும் உணர்ச்சிபூர்வமான தருணங்கள் நிகழ்ந்தன.
சீசனின் ஒரு முக்கிய நிகழ்வாக, சமீபத்தில் சாண்ட்ரா பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். ஆனால் அவர் வெளியேறும் தருணத்தில், திவ்யாவோடு நடந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் கவனம் பெற்றுள்ளது.

சாண்ட்ரா வீட்டில் இருந்து வெளியேறும் போது திவ்யா அவருக்கு ஒரு கிஃப்ட் கொடுக்க அருகில் சென்றார். திவ்யா அவரை ஹக் செய்ய முயன்ற போது, சாண்ட்ரா கையை வைத்து தடுத்து thank you என்று கூறியிருந்தார்.
இதனையடுத்து திவ்யா, “நான் இதை பெருசா எடுத்துக்கல. ஆனா எனக்கு இது ஒரு மாதிரி இருந்திச்சு.” என்று அரோரா கிட்ட கூறியுள்ளார். இந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகின்றது.
Listen News!