மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பார்வதி சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், தனுஷ் நடிப்பில் வெளியான “மரியான்” திரைப்படத்தின் படப்பிடிப்பில் நேர்ந்த அனுபவங்களை நேரடியாக பகிர்ந்துள்ளார்.
தமிழில் வெளியான சில முக்கிய படங்களில் நடித்துள்ள இந்த நடிகை, “பூ”, “மரியான்”, “உத்தம வில்லன்”, "சென்னையில் ஒருநாள்" போன்ற படங்களின் மூலம் ரசிகர்களிடம் வித்தியாசமான இடத்தைப் பெற்றுள்ளார்.

பார்வதி, மலையாள சினிமாவிலும் பல முன்னணி படங்களில் நடித்து, தனது திறமையை நிரூபித்து வருகிறார். ஆனால், சமீபத்திய பேட்டியில் அவர் பகிர்ந்த கதை, திரையுலகில் பெண்கள் பாதுகாப்பு, படப்பிடிப்பு சூழல் மற்றும் நடிகைகளின் அனுபவங்களை மீண்டும் முக்கியமாக கவனிக்க வைக்கிறது.
பார்வதி பேட்டியின் போது, “மரியான் படத்தில் ஒரு காதல் காட்சி இருந்தது. அந்த காட்சியில் நான் தண்ணீரில் முழுவதுமாக நனைந்தேன். மாற்று உடையும் கொண்டு வரவில்லை. ஒரு கட்டத்தில், உடை மாற்ற நான் ஓட்டலுக்கு செல்ல வேண்டும் என்று கூறினேன். ஆனால் படப்பிடிப்பு குழு அனுமதி மறுத்தது.” என்று கூறினார்.
அவர் மேலும், “அந்த நேரத்தில் எனக்கு ‘பீரியட்’ ஏற்பட்டு இருந்தது, எனவே உடை மாற்றம் மிகவும் அவசியமாக இருந்தது. ஆனால் படப்பிடிப்புத் தளத்தில் எனது தேவைகளை கவனிக்க யாரும் இல்லை. மொத்தம் 3 பெண்கள் மட்டுமே இருந்தனர். எனக்கு ஆதரவாக நிற்பவர்களும் இல்லை”.என்று கூறியிருந்தார்.
இந்த தகவல், தமிழ்ச் சினிமா மற்றும் மலையாளத் திரையுலகில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் அவர்களின் நலன்கள் பற்றிய கருத்துகளை மீண்டும் எழுப்பியுள்ளது.
Listen News!