விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக கானா வினோத் தான் வருவார், அவர் தான் வரவேண்டும் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் கடந்த வாரம் 18 லட்சம் ரூபா பணத்துடன் வெளியேறினார்.
இம்முறை பங்கு பற்றிய போட்டியாளர்களுள் கானா வினோத் மிகவும் சிறப்பாக விளையாடி வந்தார். அவருடைய திறமையும் அவருடைய காமெடியான பேச்சும் பலரையும் ரசிக்க வைத்தது.
ஆரம்பத்தில் கானா வினோத்தும் திவாகரும் சேர்ந்து செய்த சேட்டைகள், அவர்களுடைய நட்பு, காமெடி என்பன மக்களால் ரசிக்கப்பட்டது. அவர்கள் மெய்யழகனாக சித்தரிக்கப்பட்டார்கள். ஆனால் அதுவே பின்பு அவர்களுக்கு பிரச்சனையாக எழுந்தது.

எனினும் கானா வினோத் இறுதியாக வீட்டை விட்டு வெளியேறும் போது திவாகர் மனம் உடைந்து அழுது இருந்தார். இது பார்ப்போரை கண்கலங்கச் செய்திருந்தது. அது மட்டும் இல்லாமல் கானா வினோத்தும் பிக் பாஸ் வீட்டில் இறுதியாக கதறி அழுது இருந்தார்.
இந்த நிலையில், பிக் பாஸில் இருந்து வெளியேறிய கானா வினோத்துக்கு அமோக வரவேற்புகள் கிடைத்து வருகின்றன. அவரை காண்பதற்கான பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்து வருவதோடு, அவர் வெளியில் வந்ததும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து முத்தமிட்ட காரியங்களும் வைரலாகி வருகின்றன.
Listen News!