கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் ஆரம்பிக்கப்பட்டது. இதன் ஆரம்பத்திலேயே இதில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் தொடர்பில் கடும் விமர்சனம் முன்வைக்கப்பட்டது.
அதற்கு காரணம் சமூக வலைத்தளங்களில் நெகட்டிவ் மூலம் பிரபலமானவர்களை அதிகமாக இதில் தேர்ந்து எடுத்தது தான். அதிலும் குறிப்பாக அகோரி கலையரசன், வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர், பலூன் அக்கா என அழைக்கப்படும் அரோரா ஆகியவர்கள் இந்த சீசனில் பங்கெடுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என பலரும் குரல் எழுப்பி வந்தனர். எனினும் ஒரு கட்டத்தில் திவாகர், அரோரா மீது இருந்த நெகட்டிவ் விமர்சனங்கள் பாசிட்டிவாக மாறியது. திவாகருக்கு ஆரம்பத்தில் பலரும் தங்களுடைய ஆதரவை கொடுத்தனர்.
அதேபோல அரோராவும் தற்போது டைட்டில் வின் பண்ண வேண்டும் என பலரும் எதிர்பார்க்கின்றனர்.

இன்னொரு பக்கம் இந்த சீசனில் டைட்டில் வின்னராக கானா வினோத் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் பணப்பெட்டியுடன் வெளியேறினார். இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.
அதேபோலத்தான் இந்த சீசனில் கடும் போட்டியாளராக காணப்பட்ட பார்வதியும் டைட்டில் வின் பண்ணுவார் என நம்பப்பட்டது. ஆனால் அவரும் கமருதீனும் ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பப்பட்டனர்.
இந்த நிலையில், இரண்டு வாரங்களுக்கு முன்பு ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட கமருதீன் தன்னுடைய சக நண்பர்களாலும் குடும்பத்தாலும் ஊர் மக்களாலும் வெகுவாக கொண்டாடப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.
அதாவது கமருதீனுக்கும் பார்வதிக்கும் ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பினார்கள். ஆரம்பத்தில் இவர்களுக்கு எதிராக நெகட்டிவ் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட போதும் சான்ட்ராவின் நடிப்பு பலருக்கும் வெறுப்பை கூட்டியது.
இதனால் பலரும் சான்ட்ராவை வறுத்து எடுத்தனர். அதன்பின் பார்வதி கமருதீன் பரிதாபத்துக்குரியவர்களாக பார்க்கப்பட்டனர். பலரும் பார்வதிக்கு ஆதரவாக குரல் எழுப்பினர்.
இவ்வாறான நிலையில் கடந்த வாரம் இறுதியாக சான்ட்ரா எலிமினேட் ஆகி வெளியேறினார். அதே நாளில் கமருதீன் தனது வெற்றியை கொண்டாடிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. தற்போது இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகின்றது.
மேலும் அதில் கமருதீனுக்கு கேக் வெட்டி மிகப்பெரிய ரோஜா பூ மாலைகள் அணிவிக்கப்பட்டு, தலையில் கிரீடமும் வைக்கப்பட்டுள்ளது. இந்த சீசனில் கமருதீன் கூட டைட்டிலை வின் பண்ணுவார் என அவருடைய ரசிகர்கள் நம்பி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Listen News!