சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில் , உண்மையை மறைத்ததற்காக மீனா மீது கோபப்படுகின்றார் முத்து. மேலும் உன்னை இந்த வீட்டிற்கு கூட்டி வந்த அப்பாவுக்கு நீ உண்மையாகவே இல்லை எங்கையாவது போய்விடு என்று திட்டுகின்றார்.
இன்னொரு பக்கம் ரோகிணிக்கு வித்யாவும் இடம் கொடுக்க மறுக்கின்றார். அவர் தனது கணவருக்கு பிடிக்கவில்லை அதனால் தான் இதனை செய்ய மாட்டேன் என்று ரோகிணியை வீட்டில் தங்க இடம் அளிக்கவில்லை. பார்வதியும் இடம் கொடுக்கவில்லை.
அதற்கு பிறகு சிந்தாமணி வீட்டுக்கு சென்ற ரோகிணிக்கு நீ செய்தது சின்ன தப்பு தானே, அதற்குப் பிறகு மனோஜூக்கு உண்மையாகத்தான் இருந்தா.. மனோஜ் இந்த நிலைமை இருக்க நீ தான் காரணம் என்று அவருக்கு அடைக்கலம் கொடுக்கின்றார் சிந்தாமணி. மேலும் ரோகிணியை வைத்து தனது காரியத்தை சாதிக்க நினைக்கின்றார்.

இறுதியாக மனோஜ் தூங்கும்போது தூங்க முடியாமல் அந்த ரூமில் ரோகிணியுடன் சந்தோஷமாக இருந்த சப்தத்தை கேட்டு பதறுகிறார்.
அந்த நேரத்தில் மீனா, முத்து, மீனாவின் அம்மா, சீதா, விஜயா மற்றும் ஜீவா ஆகியோர் அவரை பார்த்து சிரிப்பது போல் நினைத்து பதறுகிறார். இதுதான் இன்றைய எபிசோட் .
Listen News!