கன்னடம், ஆங்கிலம் என இரண்டு மொழிகளில் தயாராகி வரும் Toxic திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில் நடிகர் யாஷ் மற்றும் நயன்தாரா உட்பட ஐந்து நடிகைகள் நடிக்கின்றனர்.
இந்த நிலையில், Toxic திரைப்பட டீசர் வெளியான போது அதில் சில காட்சிகள் மிகவும் ஆபாசமாக உள்ளதாகவும், அதில் பெண்ணை ஆபாசமாக சித்தரித்துள்ளதாகவும், இதனால் அந்த படத்தில் உள்ள காட்சிகளை நீக்கும் படியும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

சமூக ஆர்வலர் ஒருவரால் அளிக்கப்பட்ட புகாரில், கன்னட கலாச்சாரத்தை அவமதிக்கும் படி உள்ள Toxic பட டீசரை ரத்து செய்யும்படியும், சென்டர் வாரியமும் அந்த காட்சிகளை நீக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் தற்போது இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஏற்கனவே சென்சார் போர்டு பிரச்சனையில் ஜனநாயகன் படமும் ரிலீசுக்கு தள்ளி போய் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!