• Jan 13 2026

ராஜியின் கடிதத்தால் கண்கலங்கி நின்ற முத்துவேல்.. மொத்த பொறுப்பையும் எடுத்து கொண்ட சுகன்யா

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, கோமதி பழனியை பார்த்து நீ எனக்கு தாய் வீட்டு சீர் கொடுத்த நேரம் என்ர தாய் வீடே என் பக்கம் வந்து நின்றிருச்சு என்கிறார். மேலும், இனி அண்ணனுங்க பேசாமல் இருந்தால் கூட பரவாயில்ல என்கிறார். அதனைத் தொடர்ந்து கோமதி பழனி செய்த எல்லாத்தையும் சொல்லி சந்தோசப்படுறார். அதைக் கேட்ட பழனி எதுவும் கதைக்காமல் மகிழ்ச்சியில் அழுகிறார்.

அதனைத் தொடர்ந்து, ராஜி பழனி கிட்ட முத்துவேலுக்கும் சக்திவேலுக்கும் கடிதம் எழுதிக் கொடுத்துவிடுறார். மறுபக்கம், காந்திமதி சுகன்யாவைப் பார்த்து கடை முழுக்க உன்னோட பொறுப்பில தான் இருக்கு போல என்று சொல்ல.. அதைக் கேட்ட சுகன்யா பழனி பொலிஸ் ஸ்டேஷனுக்கு அலைஞ்சு திரிஞ்சால் நான் தானே கடையை பார்க்கணும் என்கிறார்.


அதைக் கேட்ட காந்திமதி நடந்த பிரச்சனை அப்படி, முத்துவேலும், சக்திவேலும் போய் நிற்கும் போது பழனி போகத் தானே வேணும் என்கிறார். அதைத் தொடர்ந்து பழனி கிட்ட சுகன்யா அங்க எல்லாரும் எப்படி இருக்காங்க என்று விசாரிக்கிறார். பின் உங்களை அந்த வீட்டுக்காரங்க சேர்த்திட்டாங்களா என்று கேட்கிறார். அதுக்கு பழனி ஆமா என்கிறார்.

பின் ராஜி கொடுத்த கடிதத்தை பழனி சக்திவேல் மற்றும் முத்துவேல் கிட்ட கொடுக்கிறார். அந்தக் கடிதத்தை வாசிச்சுப் பார்த்த முத்துவேல் கண் கலங்குறார். அதைத் தொடர்ந்து வடிவும் அந்தக் கடிதத்தை வாங்கிப் பார்க்கிறார். மறுபக்கம் சக்திவேலும் அழுது கொண்டிருக்கிறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Advertisement