• Jan 13 2026

விதிமுறைகளை கடைப்பிடித்தால் பிரச்சனை வராது! "ஜனநாயகன்" படம் குறித்து பிரபல நடிகை ஓபன்டாக்

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக இருந்த ‘ஜனநாயகன்’ திரைப்படம், சென்சார் பிரச்சனைகள் காரணமாக குறிப்பிட்ட தேதியில் வெளியாகாதது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஹெச். வினோத் இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்துள்ள இந்த படம், கடந்த ஜனவரி 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் ஏற்பட்ட சென்சார் சிக்கல்கள் காரணமாக படம் ரிலீஸ் ஆகவில்லை.


இந்த விவகாரம் தொடர்பாக, ரசிகர்கள், அரசியல் ஆர்வலர்கள் மற்றும் பிரபலங்கள் என பலரும் தங்களது கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், நடிகையும், அரசியல்வாதியுமான குஷ்பு சுந்தர் தெரிவித்த கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

நடிகை குஷ்பு இந்த விவகாரம் குறித்து, “நானும் எனது குழந்தையும் விஜய் ரசிகர்கள் தான். ரசிகராக படம் வராதது வருத்தம் தான். ஆனால் விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்தால் பிரச்சனைகள் வராது. ஜனநாயகன் படத்திற்கு மட்டுமில்லை, எல்லா படத்திற்கும் இது பொருந்தும்.” என்று கூறியுள்ளார். இந்த கருத்து, ரசிகர்களிடையே கலவையான எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement