பிக்பாஸ் தமிழ் சீசன் 9-இல் டைட்டில் வின்னராக கானா வினோத் வருவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக இருந்த நிலையில், அவர் திடீரென பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு போட்டியிலிருந்து வெளியேறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பிக்பாஸ் வீட்டில் முதல் நாளிலிருந்து வெளியேறும் நாள் வரை தனது கானா பாடல்கள், காமெடி, சக போட்டியாளர்களை கலாய்க்கும் பாணி மற்றும் ஆட்டத்தை கையாண்ட விதம் மூலம் ரசிகர்களை கவர்ந்தார் கானா வினோத்.
இந்த சீசனில் சமூக வலைதளங்களில் பிரபலமான பலர் பங்கேற்றிருந்தாலும், கானா வினோத் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக கானா பாடல்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின்னர், கானா வினோத்துக்கு அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் சார்பில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

குறிப்பாக அவரது மனைவி பாக்கியா ஏற்பாடு செய்த சர்ப்ரைஸ் வரவேற்பு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இதற்கான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
மேளதாளங்களுடன் நடைபெற்ற இந்த வரவேற்பின் போது, அம்பேத்கர் சிலைக்கு முத்தம் கொடுத்து தனது மரியாதையும் அன்பையும் வெளிப்படுத்தினார். இந்த காட்சிகள் அடங்கிய வீடியோக்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.
இந்த சீசனில் கோப்பையை யார் வென்றாலும், “மக்களின் மனதில் டைட்டில் வின்னர் கானா வினோத் தான்” என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஒலிம்பிக்கில் தங்க மெடல் வாங்கி இந்தியாவிற்கு பெருமை சேர்த்த தங்கமகன்.. நாடு திரும்பிய காட்சி..என கானா வினோத்தின் வீடியோவை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து கேலி செய்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.
Listen News!