கரகாட்டக்காரன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை கனகா. இவர் ஆரம்பத்தில் விருப்பம் இல்லாமல் தான் நடிப்பதற்கு அவருடைய அம்மா தேவிகா ஒத்துக் கொண்டுள்ளார்.
ஆனால் யாருமே எதிர்பார்க்காத விதத்தில் கரகாட்டக்காரன் படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இதனால் பட்டித் தொட்டி எங்கும் அறியப்பட்டார் கனகா. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அவருக்கு பல வாய்ப்புகளும் குவிந்தன.
தனது முதல் படம் ஹிட்டானதை தொடர்ந்து ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலம் ஆனார். அதேபோல தெலுங்கிலும் பல படங்களில் நடித்து பிரபலமானார். புகழின் உச்சியில் இருந்த கனகா ஒரு கட்டத்தில் சினிமாவில் நடிப்பதை திடீரென தவித்தார். அதன் பின்பு அவர் என்ன ஆனார் என்றே தெரியாமல் போனது.

80ம் ஆண்டுகளில் முன்னணி நடிகையாக வலம் வந்த கனகா, பல ஆண்டுகள் சினிமா துறையில் நிலைத்து நிற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் விலகியது ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்தது.
கடந்த ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை குட்டி பத்மினி கனகாவை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். அதில் அவர் ஆளே அடையாளம் தெரியாமல் மாறி போயிருந்தார். அந்த போட்டோவும் இணையத்தில் வைரலானது.
இந்த நிலையில், நடிகர் ராமராஜனை சந்தித்து நடிகை கனகா எடுத்துக்கொண்ட போட்டோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கரகாட்டக்காரன் பட ஜோடியின் போட்டோவை ரசிகர்கள் தற்போது மீண்டும் வைரலாக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!