• Oct 12 2025

மகளுக்காக ஒரு ஜாலியான காதல் படம் பண்ணனும்னு தோணுது... மாரி செல்வராஜ் ஓபன்டாக்.!

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

சமூக நியாயங்களைத் தழுவி கதைகளை சொல்லும் இயக்குநராக புகழ் பெற்ற மாரி செல்வராஜ், தற்போது அவரது குடும்பத்தினர் குறிப்பாக மகளின் கோரிக்கைக்காக ஒரு ஜாலியான காதல் படத்தை இயக்குவதாக உறுதிபடுத்தியுள்ளார்.


சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலில், தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான மாரி செல்வராஜ், தனது படைப்புலக வாழ்க்கையின் ஒரு புதிய கட்டத்தை தொடங்க உள்ளார் என்று கூறியுள்ளார்.

அவரது நேர்மையான பகிர்வில்,  “என் மனைவி, நண்பர்கள், அம்மா, அப்பா எல்லாரும் ஒரே கேள்வி தான் கேட்குறாங்க. 'எப்ப காதல் படம் பண்ண போற?’ என் எட்டு வயசு பொண்ணு கூட சொல்றா  ‘உங்க படத்த பார்த்தா சிரிப்பே வரமாட்டேங்குது! ஜாலியா ஒரு படம் பண்ணுப்பான்னு. அவளுக்கு அப்படி ஒரு படமாவது செய்து தாரேன்னு சொல்லியிருக்கேன்.” என்றார். 


மாரி செல்வராஜ் ஒரு காதல் படம் எடுக்கிறார் என்றாலே, அது ஒரு பரபரப்பான செய்தியாக இருக்கிறது. ஆனாலும், அவர் அதை ஒரு “ஜாலியான, குடும்பத்துடன் பார்க்கக்கூடிய படம்” என்று கூறியிருப்பது, அவரது இயக்க பாணியில் ஒரு புதிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement