• Feb 09 2026

அப்பாவின் நினைவுகளை எழுத்தால் உயிர் கொடுக்கிறேன்... மனம் திறந்த நடிகர் சூரி.!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் இலக்கியமும் சமூகப் பண்பாடும் ஒன்றுக்கொன்று இணைந்த உறவைக் கொண்டுள்ளன. சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற எழுத்தாளர் இரா.சரவணன் எழுதிய “சங்காரம்” என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா, தமிழ் இலக்கியச் சூழலில் ஒரு முக்கிய நிகழ்வாக அமைந்தது. புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் எழுத்தாளர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு விழாவிற்கு சிறப்பு வழங்கினர்.

இந்த விழாவில் திரையுலகப் பிரபலமான நடிகர் சூரி உரையாற்றிய போது, புத்தகங்கள் மனித சமூகத்தின் முன்னேற்றத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன என்பது குறித்த தனது கருத்துகளை பகிர்ந்தார். 


அதாவது, “பல நாடுகளில் புத்தகங்கள் வரலாறுகளை உருவாக்கியுள்ளன. எழுத்து மூலமாகவே சமூக சீர்திருத்தங்கள் ஏற்பட்டுள்ளன. புத்தகம் என்ற சொத்தை நமக்கு கொடுத்துள்ளார்கள்; அவை எந்தக் காலத்திலும் அழிவதில்லை. நானும் இப்போது புத்தகங்கள் படித்துக் கொண்டிருக்கிறேன். இப்போது தான் அதன் அருமை எனக்குத் தெரிகிறது.” என்று கூறியுள்ளார். 

இதன் மூலம் சூரி, புத்தக வாசிப்பின் முக்கியத்துவத்தை மட்டுமல்ல, மனிதனின் வாழ்க்கை மற்றும் சமூக முன்னேற்றத்தில் புத்தகங்களின் பங்கு எவ்வளவு தீர்மானிக்கக்கூடியதாக இருக்கின்றது என்பதை எடுத்துரைத்தார்.

அதே சமயம், அவர் தன்னுடைய அப்பாவின் வாழ்க்கை வரலாறையும் எழுதிக் கொண்டிருப்பதாகக் கூறி, வாசகர்களுக்கு ஒரு ஆழமான பார்வையை அதன்போது கொடுத்திருந்தார்.

Advertisement

Advertisement